மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 வாலிபர்கள் சாவு

தார்வார் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்தனர்.
மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 வாலிபர்கள் சாவு
Published on

உப்பள்ளி;

தார்வார் புறநகர் பெலகாவி ரோட்டில் மும்மிகட்டி கிராமத்தின் அருகே நேற்று முன்தினம் மாலை 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 2 மோட்டார் சைக்கிளில் வந்தவர்களும் பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பலியானவர்கள் பெலகாவி மாவட்டம் பைலஒங்கலா தாலுகா கேபி.பட்டியாலா கிராமத்தை சேர்ந்த பசவய்யா பூஜார் (வயது 30), உப்பள்ளி சுபாஷ் நகரை சேர்ந்த பிரகாஷ் (வயது 22) என்பதும் தெரியவந்தது.

இவர்களில் பசவய்யா தார்வாரில் இருந்து பெலகாவி நோக்கியும், பிரகாஷ் பெலகாவியில் இருந்து உப்பள்ளி நோக்கியும் சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து தார்வார் கரக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

Daily Thanthi
www.dailythanthi.com