'போருக்குத் தயார்'.. அரபிக்கடலில் இந்திய கடற்படை செய்த சம்பவம்


போருக்குத் தயார்.. அரபிக்கடலில் இந்திய கடற்படை செய்த சம்பவம்
x

இந்திய கடற்படை சார்பில் முக்கிய சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

புதுடெல்லி,

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த கொடூஞ்செயலில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான டி.ஆர்.எப். ஈடுபட்டது. இந்த அமைப்புக்கு பாகிஸ்தான் மறைமுக உதவி செய்துள்ளதும் தற்போது தெரியவந்துள்ளது.

இயைடுத்து பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை வேட்டையாட இந்திய ராணுவம், பாதுகாப்பு படை மற்றும் போலீசார் காஷ்மீரில் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறார்கள்.

இந்த சூழலில் பஹல்காம் தாக்குதல்களை நிகழ்த்தியவர்கள் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களும், அவர்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்களும் நிச்சயம் தண்டிக்கப்படுவது உறுதி என பிரதமர் மோடி உறுதி அளித்திருந்தார். இதனைத்தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் விமானப்படை, கடற்படைகளும் தயாராக உள்ளன. இந்திய கடற்படை சார்பில் முக்கிய சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் இந்தியா - பாகிஸ்தான், இடையே எந்த நிமிடமும் போர் வெடிக்கும் சூழல் உருவாகி உள்ளது.

இந்நிலையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பலில் இருந்து ஏவுகணையை ஏவி எதிரி நாடுகளின் போர்க்கப்பல்களை அழிக்கும் வகையிலான சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பான வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள இந்திய கடற்படை, "நீண்டதூரம் சென்று துல்லியமாக எதிரிகளின் போர்க்கப்பல்களை தாக்கி அழிக்கும் மல்டிபிள் ஏவுகணை சோதனையை இந்திய கடற்படை கப்பல் மேற்கொண்டுள்ளது. நம் நாட்டின் கடல்சார் நலன்களை பாதுகாப்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. தேச நலனை காப்பதற்கான பணியில், எந்நேரத்திலும், எந்த தாக்குதலுக்கும் தயாராகவே இருக்கிறோம்" என்று அதில் பதிவிட்டுள்ளது.

மேலும் இந்த பதிவில் Combat Ready (சண்டை அல்லது போருக்கு தயார்) என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது



1 More update

Next Story