சீனாவில் இருந்து வந்து, தனிமைப்படுத்தப்பட்ட 2 மாணவர்கள் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்

சீனாவில் இருந்து வந்து, தனிமைப்படுத்தப்பட்ட 2 மாணவர்கள் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சீனாவில் இருந்து வந்து, தனிமைப்படுத்தப்பட்ட 2 மாணவர்கள் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்
Published on

கோழிக்கோடு,

கேரளாவில் கொரோனா வைரஸ் நோய் தாக்கியவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், சீனாவின் உகான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் பீதியால், 2 மாணவர்கள் கடந்த 15-ந்தேதி கேரளா திரும்பினர். அவர்கள் உள்பட கோழிக்கோட்டில் உள்ள மாவட்ட ஆஸ்பத்திரியில் 300-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் அந்த 2 மாணவர்களும் சொல்லிக்கொள்ளாமல், வளைகுடா நாட்டுக்கு தப்பியோடி விட்டனர்.

இதை மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் வி.ஜெயஸ்ரீ உறுதி செய்தார். மேலும் இது தொடர்பாக மாநில கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து இருப்பதாகவும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com