

இந்த நிலையில் சீன தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு விசா வழங்க தொடங்கியிருப்பதாக டெல்லியில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. வர்த்தகம், மனிதாபிமானத் தேவைகள், குடும்ப ஒன்றுகூடல் ஆகிய காரணங்களுக்காகச் சீனா செல்ல விரும்புவோருக்கும் அது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "மார்ச் 15 முதல் இந்தியாவில் உள்ள மக்கள் பரிமாற்றங்களை மீண்டும் தொடங்குவதற்கான நோக்கத்திற்காக இந்தியாவில் உள்ள சீன தூதரகம் மற்றும் துணை தூதரகங்கள் சீனா தயாரித்த கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர்களுக்கும், தடுப்பூசி சான்றிதழ்களை வைத்திருப்பவர்களுக்கும் விசா வழங்கும் பணிகளை தொடங்கியுள்ளன" எனக் கூறப்பட்டுள்ளது.