கான்பூரில் மொகாரம் ஊர்வலத்தின் போது இருதரப்பினர் இடையே மோதல், 30 பேர் காயம்

கான்பூரில் மொகாரம் ஊர்வலத்தின் போது இருதரப்பினர் இடையே மோதல் வெடித்ததில் 30 பேர் காயம் அடைந்தனர்.
கான்பூரில் மொகாரம் ஊர்வலத்தின் போது இருதரப்பினர் இடையே மோதல், 30 பேர் காயம்
Published on

கான்பூர்,

பாராம் புர்வாவில் மொகாரம் ஊர்வலம் அனுமதிக்கப்பட்ட இடம் தவிர்த்து பிற பகுதிகளிலும் சென்றதால் பதட்டமான நிலை ஏற்பட்டு உள்ளது. துர்கா ஊர்வலம் நடைபெற்ற இடத்தை நோக்கி சென்றதும் இருதரப்பு இடையேயும் மோதல் ஏற்பட்டு உள்ளது. இருதரப்பும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசியது. இதற்கிடையே சமூக விரோத கும்பல் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்தது. போலீஸ் நிலைகள் மற்றும் கடைகள் தாக்கப்பட்டது. போலீசார் நிலையை கட்டுக்குள் கொண்டுவர கண்ணீர் புகைக்குண்டுகளை வெடிக்க செய்தனர்.

மோதலில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி விரட்டினர். இந்த மோதல்களில் 5 போலீசார் உள்பட 30 பேர் காயம் அடைந்து உள்ளனர். 10 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. கடைகளும் சேதப்படுத்தப்பட்டு உள்ளது. ராவத்பூரில் பாராம் புர்வாவில் நிலையானது இப்போது பகுதியளவு கட்டுப்பாட்டில் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பதட்டமான நிலையானது விரைவில் கட்டுக்குள் கொண்டுவரப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே சம்பவம் நேரிட்ட இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். விரைவில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. கூடுதல் போலீஸ் படையின் மோதல் நடந்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com