10-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை: கம்யூனிஸ்டு பிரமுகர் கைது

10-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கம்யூனிஸ்டு பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
10-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை: கம்யூனிஸ்டு பிரமுகர் கைது
Published on

பாலக்காடு,

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் புதுநகரம் அருகே வாரியத்கலம் பகுதியை சேர்ந்தவர் ஷாஜி (வயது 35). இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கிளை செயலாளராக இருந்து வந்தார். அவர் கொடுவாயூர் பகுதியில் விளையாட்டு உபகரணங்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், சம்பவத்தன்று 10-ம் வகுப்பு மாணவன் ஜெர்சி வாங்கி கடைக்கு வந்து உள்ளான். அப்போது அந்த மாணவனுக்கு ஷாஜி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து மாணவன் பெற்றோரிடம் தனக்கு நடந்ததை கூறியுள்ளார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் புதுநகரம் போலீசில் புகார் அளித்தனர்.

அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஷாஜியை கைது செய்தனர். மேலும் அவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com