பீகாரில் ராஷ்டிரீய ஜனதாதள கூட்டணியில் கூடுதல் தொகுதிகள் கேட்டு கம்யூனிஸ்டு போர்க்கொடி

எங்களுக்கு எல்லா வாய்ப்புகளும் திறந்தே உள்ளன என்று இந்திய கம்யூனிஸ்டு தெரிவித்துள்ளது.
பாட்னா,
பீகாரில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. ராஷ்டிரீய ஜனதாதளம் தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு (எம்.எல்.) விடுதலை கட்சி இடம்பெற்றுள்ளது. அக்கட்சி 40 தொகுதிகளை ஒதுக்குமாறு கேட்டிருந்தது.
ஆனால், கடந்த தேர்தலில் ஒதுக்கியதைப்போல் 19 தொகுதிகளை ஒதுக்க ராஷ்டிரீய ஜனதாதளம் முன்வந்துள்ளது. அதை இந்திய கம்யூனிஸ்டு (எம்.எல்.) விடுதலை கட்சி ஏற்க மறுத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
19 தொகுதிகள் என்பது கவுரவமான ஒதுக்கீடு அல்ல. எங்கள் தொகுதிகளில் 3 தொகுதிகளை மாற்றி உள்ளனர். நாங்கள் 30 தொகுதிகளை கேட்டு, புதிய கோரிக்கையை முன்வைக்க போகிறோம். இதன் மூலம் 25 சதவீத தொகுதிகளை குறைத்துக்கொண்டுள்ளோம். அதையும் ஏற்காவிட்டால், எங்களுக்கு எல்லா வாய்ப்புகளும் திறந்தே உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story






