

பெங்களூரு
பெங்களூரு அனுமந்தநகர் பகுதியில் வசித்து வருபவர் பத்மநாபா. இவருக்கு சொந்தமான வீட்டில் 42 வயது ஆசிரியை ஒருவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த ஆசிரியை தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதில் கலந்து கொண்ட பத்மநாபா, ஆசிரியைக்கு ஒரு பரிசு அளித்தார். அந்த பரிசை ஆசிரியை பிரித்து பார்த்த போது அதிர்ச்சி காத்து இருந்தது. அதாவது பத்மநாபா உள்ளாடையை பரிசாக அளித்து இருந்தார்.
இந்த நிலையில் ஆசிரியையை தொடர்பு கொண்டு பேசிய பத்மநாபா தான் பரிசாக அளித்த உள்ளாடையை அணிந்து காட்டும்படி கூறியதாக தெரிகிறது. இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியை பத்மநாபா மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார்.