இந்தியர்கள் மத்தியில் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கை கடந்த ஆண்டை விட 27% குறைந்துள்ளது-ஆய்வில் தகவல்

பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கை கடந்த ஆண்டை விட 27 சதவீதம் இந்தியர்கள் மத்தியில் குறைந்துள்ளது என ப்யூ ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தியர்கள் மத்தியில் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கை கடந்த ஆண்டை விட 27% குறைந்துள்ளது-ஆய்வில் தகவல்
Published on

சமீபத்திய ப்யூ சர்வே (உலகளாவிய அணுகுமுறை ஆய்வு, Q2) பொது தேர்தல்களுக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பு நரேந்திர மோடி அரசாங்கத்திற்கு ஒரு கலக்கம் அளிக்கும் செய்தியாக வர வாய்ப்புள்ளது.

2017 ஆம் ஆண்டில் ப்யூவால் நடத்தப்பட்ட ஆய்வில் 83 சதவீத இந்தியர்கள் பொருளாதாரம் நல்ல ஆரோக்கியத்தில் இருப்பதாக உணர்ந்தனர்.

தற்போது அது 56 சதவீதமாக குறைந்து உள்ளது. இந்த மாற்றம் உயர்ந்து வரும் எரிபொருள் விலைகள் காரணமாவோ, ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவையின் நீடித்த விளைவுகலால் இந்திய ரூபாயில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிகள் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

உண்மையில், பெருளாதாரத்தில் நம்பிக்கை குறித்து கணக்கெடுக்கப்பட்ட 27 நாடுகளில் பெரும்பாலான நாடுகளில் அதிகரித்துள்ளதாக ப்யூ ஆய்வு மூலம் தெரியவந்து உள்ளது. ஆனால் இந்தியாவில் மிகப்பெரிய வீழ்ச்சி கண்டுள்ளது.

2008 ஆம் ஆண்டிற்கு பிறகு 10 ஆண்டுகள் மனச்சோர்விற்கு பின்னர் மேற்கத்திய பொருளாதாரங்கள் மெதுவாக தங்கள் வேகத்தை மீண்டும் பெறுகின்றன என ப்யூ ஆய்வுகள் தெரிவித்து உள்ளன.

ஆய்வுப்படி மத்திய அரசு மற்றும் பா.ஜ.க.வுக்கு எந்த விதமான ஆறுதல் அளித்தாலும், இந்தியாவில் 56 சதவீதத்தினர் திருப்தியாக உள்ளனர்.

66% இந்தியர்கள் தங்கள் எதிர்கால தலைமுறை அவர்களை விட நன்றாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். 19% மட்டுமே இல்லையென நினைக்கிறார்கள். 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 16 சதவீதம் இந்தியர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கி உள்ளோம் என்று நம்புகின்றனர். எதிர்பார்த்தபடி, ஆளும் கட்சியின் ஆதரவாளர்கள் அரசாங்கத்தை எதிர்க்கிறவர்களைவிட பொருளாதார ரீதியாக நன்றாக இருப்பதாக நம்புகிறார்கள். உலகளாவிய டிரெண்ட் இந்தியாவில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளது. இந்தியாவில், அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் 48% பேர் நல்ல நிலையில் இருப்பதாக நம்புகிறார்கள். 72% மோடினோமிக்ஸில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com