பலூசிஸ்தானில் மோதல்; 13 பயங்கரவாதிகள், 7 பாகிஸ்தானிய வீரர்கள் உயிரிழப்பு

பலூசிஸ்தானில் நடந்த மோதலில் 13 பயங்கரவாதிகள் மற்றும் 7 பாகிஸ்தானிய வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.
பலூசிஸ்தானில் மோதல்; 13 பயங்கரவாதிகள், 7 பாகிஸ்தானிய வீரர்கள் உயிரிழப்பு
Published on

பலூசிஸ்தான்,

பலூசிஸ்தானின் நாவ்ஷ்கி மற்றும் பஞ்ஜ்குர் பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து, பாகிஸ்தானிய பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில், நாவ்ஷ்கி பகுதியில் நடந்த மோதலில் 9 பயங்கரவாதிகள் வரை சுட்டு கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கி சண்டையில் 4 வீரர்களும் கொல்லப்பட்டு உள்ளனர்.

இதேபோன்று பஞ்ஜ்குர் பகுதியில் நடந்த மோதலில், 4 பயங்கரவாதிகள் வரை சுட்டு கொல்லப்பட்டனர். 4 முதல் 5 பயங்கரவாதிகளை படையினர் சுற்றி வளைத்து உள்ளனர்.

இந்த துப்பாக்கி சண்டையில் 3 பாகிஸ்தானிய வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். 4 வீரர்கள் காயமடைந்து உள்ளனர். மோதலில் மொத்தம் 13 பயங்கரவாதிகள் மற்றும் 7 பாகிஸ்தானிய வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com