மாநிலங்களவை எம்.பி.யாக மல்லிகார்ஜுன கார்கே பதவியேற்பு

பதவியேற்பு விழாவில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி கலந்துகொண்டனர்.
எம்.பி.யாக மல்லிகார்ஜுன கார்கே பதவியேற்பு
Published on

டெல்லி,

தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் காலியாக இருந்த 27 மாநிலங்களவை எம்.பி. பதவிகளை நிரப்புவதற்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.

மல்லிகார்ஜுன கார்கே தேர்வு

இதில் கர்நாடகாவில் இருந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே போட்டியிட்டார். அவர் மீண்டும் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், மல்லிகார்ஜுன கார்கே மாநிலங்களவை எம்.பி.யாக இன்று பதவியேற்றுக்கொண்டார். துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை சபாநாயகருமான சி.பி.ராதாகிருஷ்ணன், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத்தலைவர் சோனியா காந்தி, வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி உள்ளிடோர் கலந்துகொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com