இலங்கை வெடிகுண்டு தாக்குதலுக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்

இலங்கை வெடிகுண்டு தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கை வெடிகுண்டு தாக்குதலுக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்
Published on: 

இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில் 160 பேர் உயிரிழந்துள்ளனர். 400க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். இச்சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பான செய்திகள் மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாதத்தின் கொடூரமான இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு என்னுடைய இரங்கலை தெரிவிக்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைந்து குணம் அடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் எனக் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com