

புதுடெல்லி,
கடந்த ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி, காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பு ஏற்றார். இன்றுடன் அப்பதவியில் ஓராண்டு நிறைவு செய்தார். இதையொட்டி, அவருக்கு வாழ்த்துகள் குவிந்தன.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அதில், எனக்கு கிடைத்த வாழ்த்துகளும், செய்திகளும் மகிழ்ச்சி அளிக்கின்றன. தங்களது அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. வலிமையான, ஒற்றுமையான, துடிப்பான காங்கிரஸ் கட்சியை கட்டமைக்கும் எனது உறுதிப்பாட்டை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.