காங்கிரஸ் தேர்தல் குழு நாளை ஆலோசனை


காங்கிரஸ் தேர்தல் குழு நாளை ஆலோசனை
x
தினத்தந்தி 7 Oct 2025 4:12 PM IST (Updated: 7 Oct 2025 5:45 PM IST)
t-max-icont-min-icon

இந்தியா கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படவில்லை.

பாட்னா,

பீகார் மாநில சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நவம்பர் 6 மற்றும் 11-ம் தேதிகளில் நடக்கிறது. இந்த நிலையில் பீகார் தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் குழு நாளை ஆலோசனை நடத்துகிறது. இந்த கூட்டத்தில் வேட்பாளர்கள் தேர்வு குறித்து முடிவு செய்யப்படும்.

இந்தியா கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படவில்லை. கூட்டணி கட்சிகளான ராஷ்ட்ரீய ஜனதாதளம் மற்றும் இடதுசாரிகளுடன் காங்கிரஸ் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

1 More update

Next Story