

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ஸ்மார்ட்போனும், ஸ்கூட்டியும் இலவசமாக வழங்கப்படும் என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார். இதை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, பா.ஜனதா, சமாஜ்வாடி ஆகிய கட்சிகளை போல், காங்கிரசும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளிக்க ஆரம்பித்து விட்டது. ஆனால், அவர்களை யார் நம்புவார்கள்? எப்படி நம்புவார்கள் என்பதுதான் அடிப்படை கேள்வி. ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. ஆனால், அங்கெல்லாம் மக்கள் நம்பும் அளவுக்கு ஏதாவது செய்திருக்கிறார்களா? அப்படி இல்லாதநிலையில், அவர்களின் வார்த்தைகளை மக்கள் எப்படி நம்புவார்கள்? பொதுமக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் இழந்து விட்டது.
மக்களை வஞ்சித்ததால்தான் மோசமான நிலையில் காங்கிரஸ் இருக்கிறது. பா.ஜனதாவுக்கும் மோசமான காலம் தொடங்கி விட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.