பாகிஸ்தானுக்கு ஆதரவாக காங்கிரஸ் செயல்படுகிறது- பாஜக கடும் விமர்சனம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று கூறிய திக்விஜய்சிங்குக்கு கர்நாடக பா.ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு ஆதரவாக காங்கிரஸ் செயல்படுகிறது- பாஜக கடும் விமர்சனம்
Published on

பெங்களூரு,

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று கூறிய திக்விஜய்சிங்குக்கு கர்நாடக பா.ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது.

கர்நாடக பா.ஜனதா செயதித்தொடர்பாளர் கணேஷ் கார்னிக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங், மத்தியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று கூறியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது. நமது நாட்டின் பெருமையை சீர்குலைப்பது, உலக அரங்கில் பிரதமரின் கவுரவத்தை பாழாக்குவது தான் காங்கிரசின் நோக்கம்.

திக்விஜய்சிங் கருத்து மூலம், அக்கட்சி சீனா, பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பது உறுதியாகியுள்ளது. அதனால் காங்கிரஸ் தனது பெயரை மாற்றிக்கொள்வது நல்லது. இதற்கு முன்பு புல்வாமா தாக்குதலின்போது, இது பெரிய சம்பவம் இல்லை என்று திக்விஜய்சிங் கூறினார்.

அது பயங்கரவாத தாக்குதல் என்று சொல்ல திக்விஜய்சிங் தயாராக இல்லை. காஷ்மீரில் அமைதியான நிலை வேண்டாம் என்று காங்கிரஸ் நினைக்கிறது. பிரதமர் மோடியை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்று பாகிஸ்தானில் ஒரு செய்தி நிறுவனத்திற்கு மணிசங்கர் அய்யர் பேட்டி கொடுத்தார். காங்கிரஸ் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுகிறது.

இவ்வாறு கணேஷ் கார்னிக் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com