மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் நோட்டீஸ்

மத்திய பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் அனுமதி கோரியது. #Congress #NoConfidenceMotion
மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் நோட்டீஸ்
Published on

புதுடெல்லி,

கடந்த 5-ம் தேதி கூடிய பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரம், காவிரி மேலாண்மை வாரியம், வங்கி மோசடி ஆகிய விவகாரங்களில் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் பெரும்பாலான நேரம் அவை முடங்கியது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி போராடிவரும் தெலுங்கு கட்சிகளான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர முயற்சி செய்தன. ஆனால் மக்களவையில் தொடர் அமளி காரணமாக நோட்டீஸ் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

பிற அரசியல் கட்சிகள் தரப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராடும் அதிமுக மீது குற்றம் சாட்டப்படுகிறது. இருப்பினும் காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் எந்தஒரு அரசியல் கட்சியும் நமக்கு ஆதரவு தரவில்லை, எனவே வாரியம் அமைக்கப்படும் வரையில் அவையில் அதிமுக போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் எம்.பி.க்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இப்போது இவ்வரிசையில் மத்திய பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் அனுமதி கோரியது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு எழுதி உள்ள கடிதத்தில் 27-ம் தேதி அவை நடவடிக்கையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் இணைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com