பெங்களூருவை துண்டு துண்டாக உடைக்க காங்கிரஸ் அரசு முயற்சி- குமாரசாமி குற்றச்சாட்டு


பெங்களூருவை துண்டு துண்டாக உடைக்க காங்கிரஸ் அரசு முயற்சி- குமாரசாமி குற்றச்சாட்டு
x

பெங்களூருவை துண்டு துண்டாக உடைக்க காங்கிரஸ் அரசு முயற்சிப்பதாக மத்திய மந்திரி குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

பெங்களூரு,

மத்திய கனரக தொழில்கள் துறை மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கெம்பேகவுடா உருவாக்கிய பெங்களூருவை துண்டு துண்டாக உடைக்க காங்கிரஸ் அரசு முயற்சி செய்கிறது. இதுகுறித்து இந்த அரசு எந்த ரீதியில் பெருநகர பெங்களூரு சட்ட மசோதாவை தாக்கல் செய்கிறது என்பதை பார்க்கிறோம். இதுகுறித்து நாங்கள் எதிர்க்கட்சி தலைவா் ஆர்.அசோக் தலைமையில் ஆலோசனை நடத்தியுள்ளோம்.

சட்டசபை கூட்டத்தில் பேச வேண்டிய விஷயங்கள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம். பட்ஜெட்டுக்கு பிறகு முக்கியமான பிரச்சினைகளை எழுப்ப நாங்கள் திட்டமிட்டு உள்ளோம். கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது.

கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையத்தில் ஊழல் நடக்கிறது. கர்ப்பிணிகள் உரிய சிகிச்சை கிடைக்காமல் இறக்கிறார்கள். விவசாயிகள் கஷ்டத்தில் உள்ளனர். அவர்களுக்கு இந்த அரசு எந்த உதவியும் வழங்கவில்லை. பெங்களூருவின் வளா்ச்சி குறைந்துவிட்டது. மெட்ரோ ரெயில் கட்டணம் உயர்ந்துவிட்டது. சட்டசபை கூட்டத்தில் பா.ஜனதா-ஜனதா தளம் (எஸ்) இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story