பாகிஸ்தானின் இசைக்கேற்ப காங்கிரஸ் எப்போதும் பாட்டு பாடி கொண்டிருக்கிறது: பிரதமர் மோடி

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் தேவையான எல்லாவித வளர்ச்சியை கவனத்தில் கொண்டு தொலைநோக்கு பார்வையுடன் பா.ஜ.க. செயல்படுகிறது என்றார்.
பாகிஸ்தானின் இசைக்கேற்ப காங்கிரஸ் எப்போதும் பாட்டு பாடி கொண்டிருக்கிறது:  பிரதமர் மோடி
Published on

கவுகாத்தி

அசாம் மாநில அரசின் பதவிக்காலம் மே 20-ந்தேதியுடன் முடிவடைகிறது. அசாம் மாநிலத்திற்கு ஏப்ரல் 9-ந்தேதி ஒரே கட்ட தேர்தலாக நடத்தி முடிக்கப்படும். இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும்.

இந்நிலையில், அசாமில் பார்பெட்டா மாவட்டத்தில் இன்று நடந்த அரசியல் பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. ஆனால், காங்கிரஸ் கட்சியோ பாகிஸ்தானின் இசைக்கேற்ப எப்போதும் பாட்டு பாடி கொண்டிருக்கிறது.

Also Read
தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு
பாகிஸ்தானின் இசைக்கேற்ப காங்கிரஸ் எப்போதும் பாட்டு பாடி கொண்டிருக்கிறது:  பிரதமர் மோடி

நாட்டின் நீண்டகால வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்குடன் பா.ஜ.க. பணியாற்றி வருகிறது. குறுகிய கால நடவடிக்கைகளையே காங்கிரஸ் எப்போதும் மேற்கொள்கிறது. அதனால், அவர்கள் ஊழலில் ஈடுபட முடிகிறது.

ஆனால், முடிவுகளை எடுக்கும்போது, சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் தேவையான எல்லாவித வளர்ச்சியை கவனத்தில் கொண்டு தொலைநோக்கு பார்வையுடன் பா.ஜ.க. செயல்படுகிறது என்றார். இந்த பாகிஸ்தானுடனான இணைப்பு என்பது தேச பாதுகாப்பில் சமரசம் செய்வது ஆகும். அதனை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றார்.

அசாமில், கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு அமைதி ஒப்பந்தங்களை அமல்படுத்துவதற்காக பா.ஜ.க. சார்பில் நேர்மையான முறையிலான முயற்சிகளும் மற்றும் எண்ணற்ற தியாகங்களும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதன் தொடர்ச்சியாக, அசாமில் அமைதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்று அவர் பேசியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com