

புதுடெல்லி,
உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதீய ஜனதா முழு பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் கூறிஉள்ளார். ஆங்கிலப் பத்திரிக்கைக்கு பேட்டியளித்து பேசிய ராஜ்நாத் சிங்கிடம், உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் சவால் குறித்து உங்களுடைய கருத்து என்ன? என்று கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்து உள்ள ராஜ்நாத் சிங், காங்கிரஸ் கட்சி மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது. அவர்கள் நாட்டை நீண்ட நாட்களாக ஆட்சி செய்வதவர்கள், அவர்களால் மக்களுக்கான அடிப்படை தேவையைகூட பூர்த்தி செய்ய முடியவில்லை.
இப்போதும் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் எழுத்தறிவு சதவிதமானது குறைவாகவே உள்ளது, ஏழ்மையானது அதிகரித்து உள்ளது. சாலைகள், மின்சாரம் மற்றும் குடிநீர் போன்றவற்றில் அடிப்படை கட்டமைப்பும் அங்கு கிடையாது என்றார்.
அரசியலில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களின் பங்கு தொடர்பான உங்களுடைய பார்வை என்ற கேள்விக்கு பதிலளித்து உள்ள ராஜ்நாத் சிங், ஒரே குடும்பத்தை சேர்ந்த நபர்கள் வரிசையாக வருவது மிகப்பெரிய பிரச்சனையாக பார்க்கவில்லை, வரிசையாக ஒரே குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்கள் அரசியலுக்கு வருவது உண்மையானது. ஒரு அரசியல்வாதியின் மகன் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாக கட்சிக்காக பணியாற்றவேண்டும், பின்னர் அரசியலுக்கு வரவேண்டும் என்றால், வரமுடியும். நீங்கள் யாரையும் நிறுத்த முடியாது, என கூறிஉள்ளார்.
உத்தரபிரதேசத்தில் உங்களுக்கு யார் முக்கியமான எதிர்க்கட்சி என்ற கேள்வியை எதிர்க்கொண்டு பதிலளித்த ராஜ்நாத் சிங், இதனை முடிவு செய்வது கடினமானது. பாரதீய ஜனதா அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. சில பகுதியில் சமாஜ்வாடியை எதிர்க்கொள்கிறது, 10 தொகுதிகள் வரையில் சிறிய கட்சிகளை எதிர்க்கொள்கிறது. பாரதீய ஜனதா முழுபெரும்பான்மையை நோக்கி செல்கிறது என்று நான் நினைக்கின்றேன் என்று கூறிஉள்ளார். பகுஜன் சமாஜ் சவால் குறித்தான கேள்விக்கு பதிலளித்து உள்ள ராஜ்நாத் சிங்,
பகுஜன் சமாஜ் கட்சி சவலாக இல்லை. ஒரு தோல்வியடையும் மோதலில் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி - காங்கிரஸ் கூட்டணி போட்டியிடுகிறது என கூறிஉள்ளார்.