140 கோடி மக்கள் மீது காங்கிரசுக்கு நம்பிக்கை இல்லை: பா.ஜ.க. தலைவர் நிதின் நபீன்

நாட்டின் அரசியல் சாசனத்தின்படியே, ஜனநாயகம் ஆட்சி செய்யப்பட வேண்டும். அதனை பிரதமர் மோடி உயரிய வகையில் கடைப்பிடித்து வருகிறார் என்றார்.
நிதின் நபீன்
Published on: 

ரோத்தக்

140 கோடி மக்கள் மீது காங்கிரசுக்கு நம்பிக்கை இல்லை என்று பா.ஜ.க. தலைவர் நிதின் நபீன்

அரியானாவின் ரோத்தக் நகரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபீன் இன்று கலந்து கொண்டார். அவர் பேசும்போது, நாட்டின் 140 கோடி மக்கள் மீது காங்கிரசுக்கு நம்பிக்கை இல்லை. பின்னர் யார் மீது நீங்கள் நம்பிக்கை வைத்துள்ளீர்கள்? 3 கோடி ஊருவல்காரர்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள்.

ஜனநாயகத்திற்கு சவால்

ராகுல் காந்தியிடம், உங்களின் உள்நோக்கம் என்னவென்று கேட்க விரும்புகிறேன்? ஜனநாயகத்திற்கு ஏன் சவால் விடுகிறீர்கள்? ஜனநாயகத்தில் மக்களின் முடிவே உச்சபட்சம் வாய்ந்தது. மக்கள் வாக்களிக்கும்போது எல்லாம் நீங்கள் தோல்வியை தழுவுகிறீர்கள்.

கர்நாடகாவில் வெற்றி பெறும்போது, ஜனநாயகம் வெற்றி பெற்றது என கூறுகிறீர்கள். அரியானா, மராட்டியம், உத்தர பிரதேசம், பீகார் அல்லது மேற்கு வங்களத்தில் தோற்றுவிட்டால், உடனே நீங்கள் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என்கிறீர்கள். என்ன வகையான இரட்டை நிலைப்பாடு இது? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இதில் இருந்து காந்தி குடும்பத்தின் சர்வாதிகரத்தின்படியே ஜனநாயகம் நடைபெற வேண்டும் என்ற உங்களுடைய விருப்பம் தெளிவாக தெரிகிறது. ஆனால், நாட்டின் அரசியல் சாசனத்தின்படியே, ஜனநாயகம் ஆட்சி செய்யப்பட வேண்டும். அதனை பிரதமர் மோடி உயரிய வகையில் கடைப்பிடித்து வருகிறார். நாட்டின் ஜனநாயகத்தின்படி பிரதமர் மோடி எப்போதும் நடந்து கொள்கிறார் என்று கூறினார்.

X