காங்கிரஸ் பா.ஜனதாவிற்கு உதவி செய்கிறது: அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம்

காங்கிரஸ் பா.ஜனதாவிற்கு உதவி செய்கிறது என அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம் செய்து உள்ளார்.
காங்கிரஸ் பா.ஜனதாவிற்கு உதவி செய்கிறது: அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம்
Published on

பா.ஜனதாவிற்கு எதிரான கொள்கையில் காங்கிரசும், ஆம் ஆத்மியும் ஒரு வரிசையில் வருகிறது. எனவே, இரு கட்சிகளும் டெல்லியில் கூட்டணி வைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆம் ஆத்மி முயற்சி செய்தும் கூட்டணி ஏற்படவில்லை. மாநில தலைமைகள் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். 6 தொகுதிகளுக்கு ஆம் ஆத்மி வேட்பாளர்களை அறிவித்தது. ஒரு தொகுதியை வைத்திருந்தது. இப்போது காங்கிரசும் தனித்து போட்டியென அறிவித்துள்ளது.

காங்கிரசுக்கு இரண்டு தொகுதி வரையில் தரவும், பஞ்சாப்பில் கூட்டணி வைக்கவும் ஆம் ஆத்மி முன்வந்திருந்தது.

கெஜ்ரிவாலால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட ஷீலா தீட்சித் பேசுகையில், ஆம் ஆத்மியுடன் கூட்டணியில்லை, இது இறுதியானது. முடிவை ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டார். காங்கிரஸ் 7 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என்றார்.

இந்நிலையில் காங்கிரஸ் பா.ஜனதாவிற்கு உதவி செய்கிறது என அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம் செய்து உள்ளார்.

கெஜ்ரிவால் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், மோடி-ஷாவை தோற்கடிக்க வேண்டும் என்று தேசமே விரும்பும் நிலையில், பா.ஜனதாவிற்கு எதிரான வாக்கை பிரிக்க காங்கிரஸ் உதவி செய்கிறது. பா.ஜனதாவுடன் காங்கிரஸ் ரகசியமான புரிந்துணர்வு கொண்டுள்ளது என வதந்திகள் உள்ளது. காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணிக்கு எதிராக போட்டியிட டெல்லி தயார். அந்த கூட்டணியை டெல்லி மக்கள் தோற்கடிப்பார்கள் என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com