மன்னர்கள், ராணிகளின் கட்சி காங்கிரஸ் - அமித்ஷா விமர்சனம்

காங்கிரஸ் மன்னர்கள், ராணிகளின் கட்சி என்று அமித்ஷா விமர்சனம் செய்துள்ளார்.
மன்னர்கள், ராணிகளின் கட்சி காங்கிரஸ் - அமித்ஷா விமர்சனம்
Published on

சிம்லா,

68 தொகுதிகளை கொண்ட இமாச்சலபிரதேச சட்டசபைக்கு வரும் 12-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்ற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்படுகிறது.

இதனிடையே, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இமாச்சலபிரதேச தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் தீவிர பிரசாரத்தில் குதித்துள்ளன.

இந்நிலையில், இமாச்சலபிரதேசத்தின் ஹமீர்பூரில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றார். பிரசார கூட்டத்தில் அமித்ஷா பேசுகையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து முதல்-மந்திரியாக வேண்டுமானால் நீங்கள் யாருடைய மகன் அல்லது மகளாக இருக்க வேண்டும். காங்கிரஸ் மன்னர்கள், ராணிகளின் கட்சி. இமாச்சலபிரதேசத்தில் செய்த வளர்ச்சி பணிகளை பாஜகவால் கணக்குகாட்ட முடியும் ஆனால், எவ்வளவு நாள் ஆட்சி செய்தோம் என்பதை கூட காங்கிரசால் கணக்கு காட்ட முடியாது' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com