காங்கிரஸ் சித்தாந்தம் ஒருபோதும் அழியாது; மல்லிகார்ஜுன கார்கே

ஏழைகளின் உரிமைகளில் சமரசம் செய்யவில்லை என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்
காங்கிரஸ் சித்தாந்தம் ஒருபோதும் அழியாது; மல்லிகார்ஜுன கார்கே
Published on

டெல்லி,

காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டதன் 140வது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தின் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கொடியேற்றினார். இதன் பின் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற கார்கே பேசியதாவது,

காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட தினமான இன்று காங்கிரஸ் கட்சி முடிந்துவிட்டது என சொல்பவர்களுக்கு நான் ஒன்றை கூறிக்கொள்கிறேன். எங்கள் வலிமை குறைவாக இருக்கலாம். ஆனால் எங்கள் முதுகெழுப்பு நேராக உள்ளது. நாங்கள் அரசியலமைப்பு சாசனம், மதச்சார்பின்மை, ஏழைகளின் உரிமைகளில் சமரசம் செய்யவில்லை. காங்கிரஸ் என்பது ஒரு சித்தாந்தம். சித்தாந்தம் அழியாது. கோவில், மசூதி பெயரில் காங்கிரஸ் வெறுப்பை பரப்பாது என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com