எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க திருமாவளவனுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே அழைப்பு..!

எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க திருமாவளவனுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க திருமாவளவனுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே அழைப்பு..!
Published on

புதுடெல்லி,

அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி நடந்து வருகிறது. இதற்காக கடந்த மாதம் 23-ந் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடந்தது. 2-வது கூட்டம் கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் வருகிற 17, 18 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு திருமாவளவன் கூட்டத்தில் பங்கேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து மல்லிகார்ஜூன கார்கே திருமாவளவனுக்கு எழுதிய கடிதத்தில்,

"தொல். திருமாவளவன் அவர்களே 17 ஜூலை 2023 அன்று மாலை 6.00 மணிக்கு கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். கூட்டம் 18 ஜூலை 2023 அன்று காலை 11.00 மணி முதல் தொடரும். உங்களை பெங்களூரில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com