பஞ்சாப்பில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது - நவ்ஜோத் சிங் சித்து குற்றச்சாட்டு

பஞ்சாப்பில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று நவ்ஜோத் சிங் சித்து குற்றஞ்சாட்டியுள்ளார்.
image courtesy: ANI
image courtesy: ANI
Published on

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைத்த பிறகு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக நவ்ஜோத் சிங் சித்து குற்றஞ்சாட்டியுள்ளார்.

பஞ்சாப்பில் உள்ள பாட்டியாலாவின் சனூரில் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோவை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர் அந்த பதிவில், 'கெஜ்ரிவால், உங்கள் உயிருக்கு ஆபத்து என்று உங்கள் மக்கள் டெல்லியில் நீதிமன்றத்திற்கு செல்கிறார்கள்.

பஞ்சாபியர்களின் உயிரைப் பற்றி கவலைப்பட வேண்டாமா? டெல்லியில் நடந்தால் அதை காழ்ப்புணர்ச்சி என்கிறீர்கள். பஞ்சாபில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். சனூரில் மற்றொரு காங்கிரஸ் தொண்டர் கொடூரமாக தாக்கப்பட்டார். பஞ்சாப்பில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது' என்று கூறியுள்ளார்.

மேலும் மற்றொரு பதிவில் அவர், 'மாற்றம் என்பது முன்னேற்றம் என்பது அவசியமில்லை. இது பஞ்சாப் கையெழுத்திட்ட பத்லாவ் அல்ல. துப்பாக்கி முனையில் கொலைகள், கார் திருட்டுகள், வழிப்பறிகள் என கட்டுப்பாடற்ற ஆம் ஆத்மி கட்சியினர் சுயநல நோக்கங்களை நிறைவேற்றுகிறார்கள். இது பகத் சிங்கின் தன்னலமற்ற மற்றும் தியாகத்தின் சித்தாந்தத்திற்கு அப்பாற்பட்ட துருவங்கள்' என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com