ராகுல் காந்தி பங்கேற்கும் காங்கிரஸ் கூட்டம்: புறக்கணிக்க வில்லை - சசிதரூர்

கேரள காங்கிரஸ் தலைமையும் ராகுலும் எனக்கு உரிய மரியாதை வழங்கவில்லை என சசிதரூர் கூறி வருகிறார்.
ராகுல் காந்தி பங்கேற்கும் காங்கிரஸ் கூட்டம்: புறக்கணிக்க வில்லை - சசிதரூர்
Published on

புதுடெல்லி,

கேரளாவின் திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாக இருப்பவர் சசி தரூர். இவர் சமீபகாலமாக பிரதமர் மோடியையும், மத்திய அரசின் செயல்பாடுகளையும் புகழ்ந்தும், பாராட்டியும் பேசி வருகிறார். இது காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

சக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், கேரள சட்டசபைக்கு நடைபெற உள்ள தேர்தல் குறித்து ஆலோசிக்க அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் மற்றும் கேரள காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆனால், இந்தக் கூட்டத்தை கேரளாவைச் சேர்ந்த முக்கிய எம்.பி.யான சசி தரூர் புறக்கணிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் ராகுல் காந்தி பங்கேற்கும் காங்கிரஸ் கூட்டத்தில் இருப்பேன். கூட்டத்தைப் புறக்கணிக்கும் திட்டம் எதுவும் இல்லை என சசிதரூர் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி 18-ந்தேதி ராகுல் கொச்சிக்கு வந்திருந்த போது, கேரள காங்கிரஸ் தலைமையும், ராகுலும் தனக்கு உரிய மரியாதை வழங்கவில்லை என்ற அதிருப்தியில் சசி தரூர் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com