பீகாரை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. மாரடைப்பால் மரணம்

பீகாரை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
பீகாரை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. மாரடைப்பால் மரணம்
Published on

புதுடெல்லி,

பீகார் மாநிலம் கிஷான்கஞ்ச் தொகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர், மவுலானா அஸ்ரார்-உல்-ஹக். இவர் நேற்று முன்தினம் மாலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு கிஷான்கஞ்சில் உள்ள சுற்றுலா இல்லத்தில் இரவில் தங்கினார்.

அங்கு நேற்று அதிகாலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரது ஆதரவாளர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 76. அவரது இறுதிச்சடங்குகள் நேற்று மாலையில் அவரது சொந்த ஊரில் நடந்தது. மவுலானா அஸ்ரார்-உல்-ஹக் எம்.பி.க்கு 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.

மவுலானா அஸ்ரார்-உல்-ஹக் எம்.பி. மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com