காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இந்த வாரம் ஜம்மு செல்ல திட்டம்

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இந்த வாரம் ஜம்மு செல்ல திட்டமிட்டு உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இந்த வாரம் ஜம்மு செல்ல திட்டம்
Published on

ஜம்மு,

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி கடந்த மாதம் காஷ்மீர் சென்றிருந்தார். அப்போது அவர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள ஹஸ்ரதால் தர்கா மற்றும் கீர்பவானி கோவிலுக்கு சென்றிருந்தார்.

இந்நிலையில், இந்த வாரம் அவர் ஜம்மு செல்ல திட்டமிட்டு உள்ளார். இந்த பயணம் பெரும்பாலும் 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடைபெறலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ராகுல் காந்தியின் இந்த பயணத்தில் அவர் மாதா வைஷ்ணவி தேவி கோவிலில் சாமி தரிசனம் செய்வார் எனவும், காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில் உரையாற்றுவார் எனவும் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியுள்ளன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com