

புதுடெல்லி,
உலகப் பொதுமறை நூலான திருக்குறள் சமீப காலமாக இந்தியாவின் பல்வேறு மாநில மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. மத்திய அரசியல் தலைவர்கள் தங்களது மேடைப் பேச்சுகளில் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசுவதும் இதற்கு ஒருவகையில் காரணமாக அமைந்திருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி, பல சமயங்களில் திருக்குறளை உதாரணமாக பயன்படுத்தி, அரசியல் விழாக்களில் பேசி வருகிறார். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி.யின் கவனமும் தற்போது திருக்குறளின் பக்கம் திரும்பியுள்ளது.
இதனை ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தற்போது அவர் திருக்குறளை வாசித்து வருவதாகவும், திருக்குறளின் கருத்தாழம் தன்னை வியப்பில் ஆழ்த்தியதாகவும் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.