நாட்டு மக்களிடம் காங். மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்

கடந்த 2019- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் புல்வமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழந்தனர்.
நாட்டு மக்களிடம் காங். மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்
Published on

புதுடெல்லி,

புல்வமா தாக்குதல் பாகிஸ்தான் அரசின் மிகப்பெரிய சாதனை என பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி பவாத் சௌத்ரி தெரிவித்திருந்தார். புல்வமா தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம் என பலமுறை இந்தியா கூறி வரும் நிலையில், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மந்திரி ஒருவரே ஒப்புதல் அளித்தது உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், புல்வமா தாக்குதலில் பல்வேறு சதிச்செயல்கள் இருப்பதாக கூறியதற்கு காங்கிரஸ் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியிருப்பதாவது:-

புல்வமா பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னணியில் தங்களுக்கு தொடர்பு இருப்பதை பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த தாக்குதலில் பல்வேறு சதி கோட்பாடுகள் இருப்பதாக பேசி வந்த காங்கிரஸ் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

புல்வமா தாக்குதலுக்கு பாதுகாப்பு குறைபாடுகளே காரணம் எனவும் இந்த தாக்குதலால் அதிகம் பயன்பெற்றது யார்? எனவும் ராகுல் காந்தி பாஜகவை கடுமையாக விமர்சித்து இருந்தது நினைவுகூரத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com