ஒரே வர்த்தக பெயரில் உரம் விற்பனைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு

ஒரே வர்த்தக பெயரில் உரம் விற்பனைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஒரே வர்த்தக பெயரில் உரம் விற்பனைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் உரத்தின் பெயரில் ஒருமித்த தன்மையை கொண்டு வருவதற்காக 'பாரத்' என்ற ஒரே வர்த்தக பெயரில் உரம் விற்பனை செய்யுமாறு உர நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதாவது:-

எங்கும் நிறைந்தவர் தனது சுய விளம்பரத்துக்காக செய்யும் எதுவும் இனிமேல் எங்களுக்கு வியப்பு ஏற்படுத்தாது. கடைசியாக, எல்லா உரங்களையும் ஒரே பெயரில் விற்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதுவும் பிரதமர்-பி.ஜே.பி. திட்டத்தின் ஒரு அங்கமாக இதை செய்கிறார்கள்.

ஒரே நாடு, ஒரே மனிதர், ஒரே உரம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com