காங்கிரஸ் கட்சி தங்கள் வாக்குறுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை: ஜே.பி.நட்டா


காங்கிரஸ் கட்சி தங்கள் வாக்குறுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை: ஜே.பி.நட்டா
x
தினத்தந்தி 17 Nov 2024 6:47 AM IST (Updated: 17 Nov 2024 1:48 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி யாரிடமும் பாரபட்சம் காட்டியதில்லை என்று ஜே.பி.நட்டா கூறினார்.

மும்பை,

மராட்டியத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவரும், மத்திய மந்திரியுமான ஜே.பி.நட்டா கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் எஸ்.சி., எஸ்.டி மற்றும் ஓ.பி.சி. ஒதுக்கீட்டை சிறுபான்மையினருக்கு வழங்க விரும்புகிறது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி யாரிடமும் பாரபட்சம் காட்டியதில்லை.

அரசியலமைப்பு மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை ஒருபோதும் அனுமதிக்கவில்லை. ராகுல்காந்திக்கு அரசியலமைப்பின் சட்டத்தின் ஏ.பி.சி. கூட புரியவில்லை. அவர் தனது காதல் கடையில் வெறுப்பு பொருட்களை விற்பனை செய்கிறார்.

ஒடுக்குதல் மற்றும் வாக்கு வங்கி அரசியலை நாம் தடுக்க வேண்டும். பிரதமர் மோடியின் அரசு ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும், தொழிலதிபர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பெண்களுக்கும் ஆதரவானது. இதற்கு பொறுப்பு உள்ளது. ஆனால் மறுபுறம் காங்கிரஸ் கட்சி தங்கள் வாக்குறுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சில சமயங்களில் ஒரே மாதிரியான வாக்குறுதிகளை பலமுறை முன்வைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story