100 நாள் வேலை திட்ட பிரச்சினை: மத்திய அரசுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு


100 நாள் வேலை திட்ட பிரச்சினை: மத்திய அரசுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு
x

விபி-ஜி ராம் ஜி என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது

டெல்லி,

காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு (100 நாள் வேலை திட்டம்) பதிலாக விபி-ஜி ராம் ஜி என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. குறிப்பாக, இந்த திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டுள்ளதையும், திட்டத்தில் மாநில அரசின் நிதிச்சுமை பல மடங்கு அதிகரிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வருகிறது.

இந்நிலையில், 100 நாள் வேலை திட்ட பிரச்சனையில் மத்திய அரசுக்கு எதிராக வரும் 5ம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றி விபி-ஜி ராம் ஜி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது தொடர்பாக மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் இந்த போராட்டத்தை நடத்த உள்ளது.

1 More update

Next Story