

புதுடெல்லி,
119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இங்கு ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள டி.ஆர்.எஸ். கட்சி போராடி வருகிறது.
காங்கிரஸ் கட்சி தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதேபோல் பாஜகவும் களத்தில் இருக்கிறது.
தொண்டர்களின் விருப்பத்தின் பேரில் தெலுங்கானாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பிரசாரம் செய்ய உள்ளார். வருகிற 22 மற்றும் 23-ம் தேதிகளில் பிரசாரம் செய்து காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு சோனியா காந்தி ஆதரவு திரட்டுகிறார்.
தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிடவுள்ள 65 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி சமீபத்தில் வெளியிட்டது. நேற்று 2-வது கட்டமாக இன்று 10 வேட்பாளர்கள் பெயர்களை கொண்ட பட்டியலை வெளியிட்டது. தெலுங்கனாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுகிறது.
இந்நிலையில், தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக ஜெட்டி குசும் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.