காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாரத்தில் ஒருநாள் காங்கிரஸ் நிர்வாகிகளை சந்திப்பார்

காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் , வாரத்தில் ஒருநாள் கட்சியினரைச் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. #RahulGandhi
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாரத்தில் ஒருநாள் காங்கிரஸ் நிர்வாகிகளை சந்திப்பார்
Published on

புதுடெல்லி

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இந்திரா காந்தி இருந்தபோது, 24 டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சியினரை தொடர்ந்து சந்தித்து வந்தார். அந்த நடைமுறை பிறகு கைவிடப்பட்டது.

காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி, முக்கிய நிகழ்வுகளின்போது மட்டுமே காங்கிரஸ் தலைமையகத்திற்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்நிலையில், தனது பாட்டி கடைப்பிடித்த நடைமுறையை ராகுல் காந்தி மீண்டும் தொடங்கியிருக்கிறார்.

இனி, வாரத்தில் ஒரு நாள் காலை 9.30 மணி முதல் காலை 11 மணி வரை கட்சித் தலைமையகத்தில் ராகுல் காந்தி, நிர்வாகிகளைச் சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு காங்கிரஸ் நிர்வாகிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com