ராஞ்சியில் பழங்குடி மக்களுடன் உற்சாகமாக நடனமாடிய ராகுல்காந்தி!!

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பழங்குடி மக்களுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நடனம் ஆடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ராஞ்சியில் பழங்குடி மக்களுடன் உற்சாகமாக நடனமாடிய ராகுல்காந்தி!!
Published on

ராஞ்சி,

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். பல மாநிலங்களில் செல்லும் இடம் எல்லாம் பிரதமர் மோடியை குறி வைத்தே விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்.

இன்று ஜார்கண்ட் மாநிலம் சென்ற அவரை பழங்குடி மக்கள் பாரம்பரிய மேள, தாளங்களுடன் அவரை உற்சாகமாக வரவேற்றனர். இந்நேரத்தில் நடனமாடி கொண்டிருந்த பழங்குடி இனமக்களை கண்ட ராகுல்காந்தி அவர்களுடன் இணைந்து உற்சாகமாக நடனமாடினார்.

இதனை பார்த்த மக்கள் பூரித்து போயினர். தங்களது மகிழ்ச்சியையும் தெரிவித்தனர். முன்னதாக, நடன கலைஞர்களே ராகுலை அழைத்ததாகவும், இதனையடுத்து ராகுல்காந்தி ஆடியதாகவும் அந்த பகுதியில் உள்ள சிலர் தெரிவித்தனர். மேலும் ராகுல்காந்தியின் நடனம் மிகச்சிறப்பாக இருந்தாக அவர்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.

முன்னதாக ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், விமானப்படை பணத்தை எடுத்து அனில் அம்பானிக்கு பிரமதர் மோடி கொடுத்துள்ளார்.விமானப்படையின் பணத்தை திருடுவது வெட்கக் கேடானது என குற்றம்சாட்டினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com