தேர்தல் அறிவிப்புக்கு முன்பே முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்

அசாமில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.
தேர்தல் அறிவிப்புக்கு முன்பே முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்
Published on

கவுகாத்தி,

தமிழ்நாடு, கேரளா, புதுவை, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டமன்ற பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதனால், இந்த 5 மாநிலங்களிலும் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்த நிலையில், அசாமில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி ஒரு படி மேலே சென்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியலையே வெளியிட்டுள்ளது. அசாமில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.வரும் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க வியூகம் வகுத்து வரும் காங்கிரஸ், 42 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. அசாம் மாநில காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகோய், ஜோர்ஹாட் தொகுதியில் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அசாமில் மொத்தம் 126 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com