ஆர்.எஸ்.எஸ். அமைப்பை முஸ்லிம் பிரதர்ஹூட் இயக்கத்துடன் ஒப்பிட்டு ரம்யா பதில்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பை முஸ்லிம் பிரதர்ஹூட் இயக்கத்துடன் ஒப்பிட்ட விவகாரத்தில் ராகுல் காந்தி மீதான விமர்சனத்திற்கு ரம்யா பதிலடியை கொடுத்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பை முஸ்லிம் பிரதர்ஹூட் இயக்கத்துடன் ஒப்பிட்டு ரம்யா பதில்
Published on

பெங்களூரு,

லண்டன் சென்ற போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அங்குள்ள இன்டர்நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் ஸ்ட்ராடஜிக் ஸ்டடீஸ் மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், இந்தியாவில் உள்ள ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும், எகிப்தில் உள்ள தீவிரவாத அமைப்பான முஸ்லிம் பிரதர்ஹூட் அமைப்புக்கும் ஏராளமான ஒற்றுமைகள் இருக்கின்றன. இரு அமைப்புகளும் ஒன்று என்று நான் சொல்லவில்லை. இந்தியாவில் உள்ள ஜனநாயக அமைப்புகளை எல்லாம் ஆர்எஸ்எஸ் அமைப்பு கைப்பற்ற முயற்சிக்கிறது என்று விமர்சனம் செய்தார். ராகுலின் பேச்சுக்கு பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்து, வெளிப்படையாக மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறியிருந்தது.

இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு எதிராக சமூக வலைதளங்களில் விமர்சனங்களும் எழுந்தது. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை முஸ்லிம் பிரதர்ஹூட் இயக்கத்துடன் ஒப்பிட்ட விவகாரத்தில் ராகுல் காந்தி மீதான விமர்சனத்திற்கு ரம்யா பதிலடியை கொடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதளம் மற்றும் தகவல் தொடர்புத் துறை தலைவராக உள்ள நடிகை திவ்யா ஸ்பந்தனா (ரம்யா) ஆர்.எஸ்.எஸ். அமைப்பை முஸ்லிம் பிரதர்ஹூட் இயக்கத்துடன் ஒப்பிட்டு கிராஃபிக் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ரம்யா வெளியிட்டுள்ள புகைப்படத்தில் இரு இயக்கங்கள் இடையிலான ஒற்றுமையை பட்டியலிட்டுள்ளார். இரு இயக்கங்களும் தொடங்கப்பட்ட ஆண்டு, அவர்களுடைய நோக்கம், பிராந்தியத்தில் அவர்களுடைய செயல்பாடு ஆகியவற்றில் இருக்கும் ஒற்றுமை என பட்டியலிட்டுள்ளார். தேசியத் தலைவர்களின் படுகொலைகளில் தொடர்பு காரணமாக இரு அமைப்புகளும் சட்ட விரோதமாக செயல்பட்டதாக தடை செய்யப்பட்டது எனவும் கிராஃபிக் கூறுகிறது. அரபு எழுச்சியின் காரணமாகதான் 2011-ல் முன்னாள் அதிபர் முகமது முசோரி ஆட்சிக்கு வந்தார். ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே போராட்டம் நடத்தியதால்தான் மோடியும் பிரதமர் ஆக முடிந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com