

புதுடெல்லி,
மக்களவையில் நேற்று எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, பாஜகவைச்சேர்ந்த எம்.பி அனுராக் தாகூர் தனது செல்போனில் எதிர்க்கட்சிகள்
அமளியில் ஈடுபட்டதை படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இது அவை விதிகளை மீறிய செயல் எனவும், அனுராக் தாகூருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த விவகாரம் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கவனத்துக்கு எடுத்துசெல்லப்பட்டது. இதையடுத்து, அவை விதிமுறைகளை மீறி செயல்பட்ட அனுராக்தாகூருக்கு சுமித்ரா மகாஜன் கடும் எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து, தனது தவறை ஒப்புக்கொண்ட அனுராக் தாகூர், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார்.