நாடாளுமன்றத்தில் இந்தியா-சீனா உறவு குறித்து விவாதிக்க வேண்டும்: காங்கிரஸ்

இந்தியா-சீனா உறவு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

இந்தியா-சீனா குறித்த விவாதத்தில் மூலோபாய மற்றும் பொருளாதாரக் கொள்கை இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், 'சீனாவுடனான இந்தியாவின் உறவுகளில் சமீபத்திய முன்னேற்றங்கள்' என்ற தலைப்பில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தானாக முன்வந்து அளித்த அறிக்கையை காங்கிரஸ் ஆய்வு செய்தது. இதுபோன்ற அறிக்கைகளை தாக்கல் செய்வது துரதிர்ஷ்டவசமானது. எனினும் அது மோடி அரசாங்கத்தின் வழக்கமானதும் கூட. அறிக்கை குறித்து எம்.பி.க்கள் எந்த விளக்கத்தையும் பெற அனுமதிக்கப்படவில்லை.

2020 ஏப்ரலுக்கு முன் இருந்த பழைய இயல்பு சீனாவால் ஒருதலைப்பட்சமாக சீர்குலைந்த பிறகு, மோடி அரசாங்கம் ஒரு புதிய நிலையை ஒப்புக்கொண்டு புதிய இயல்புடன் வாழ ஒப்புக்கொண்டது இப்போது தெளிவாக தெரிகிறது. லடாக் எல்லை பகுதியில் நமது கால்நடை மேய்ப்பவர்களுக்கான பாரம்பரிய மேய்ச்சல் உரிமைகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளதா? நமது பாரம்பரிய ரோந்துப் புள்ளிகளுக்கு தடையின்றி அணுகல் கிடைக்குமா? என்பன உள்ளிட்டவை வெளியுறவு மந்திரியின் அறிக்கையில் தெளிவுப்படுத்தப்படவில்லை.

எனவே இந்தியா-சீனா உறவு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும். இந்த விவாதம் மூலோபாய மற்றும் பொருளாதாரக் கொள்கை இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com