காங்கிரஸ் மக்களை திசை திருப்புகிறது: சட்ட திருத்தத்தால் யாரும் குடியுரிமையை இழக்கமாட்டார்கள் - அமித்ஷா திட்டவட்டம்

சட்ட திருத்தத்தால் யாரும் குடியுரிமையை இழக்க மாட்டார்கள். காங்கிரஸ் மக்களை திசை திருப்புகிறது என்று அமித்ஷா கூறினார்.
காங்கிரஸ் மக்களை திசை திருப்புகிறது: சட்ட திருத்தத்தால் யாரும் குடியுரிமையை இழக்கமாட்டார்கள் - அமித்ஷா திட்டவட்டம்
Published on

சிம்லா,

இமாசலபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா அரசு அமைந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சிம்லாவில் பா.ஜனதா சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் குடியுரிமை திருத்த சட்டத்தால் முஸ்லிம்கள் தங்கள் குடியுரிமையை இழப்பார்கள் என்று வதந்தியை பரப்பி வருகிறது. அந்த சட்டத்தில் யாருடைய குடியுரிமையாவது பறிபோகும் என்று ஒரு வரியையாவது காட்ட முடியுமா? என ராகுல் காந்திக்கு நான் சவால் விடுகிறேன்.

குடியுரிமை திருத்த சட்டத்தை நன்றாக படித்துப் பாருங்கள் என்று சிறுபான்மையினரை குறிப்பாக முஸ்லிம்களை நான் கேட்டுக் கொள்கிறேன். யாரும் குடியுரிமையை இழக்க மாட்டார்கள். பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் மதரீதியான துன்புறுத்தலை சந்தித்த சிறுபான்மையினருக்கு இந்த சட்டம் இந்திய குடியுரிமை வழங்குகிறது.

நேரு-லியாகத் உடன்படிக்கையின்படி மதங்களையும், சிறுபான்மையினரின் இதர உரிமைகளையும் பாதுகாக்க பாகிஸ்தான் தவறிவிட்டது. இதுவே மோடி தலைமையிலான பா.ஜனதா அரசை இந்த சட்டம் கொண்டுவர தூண்டியது. இவ்வாறு அமித்ஷா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com