ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் - காங்கிரஸ்

தலைமை தேர்தல் ஆணையர் மீது எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.
காங்கிரஸ்
Published on: 

புதுடெல்லி,

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகும் வரையில் காங்கிரஸ் கட்சியின் போராட்டம் தொடரும் என பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் உறுதியளித்துள்ளார்.

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் (எஸ்.ஐ.ஆர்.) பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சட்டவிரோதமாகவும், தன்னிச்சையாகவும் செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இதனால், அவர் பதவி விலக வேண்டும் என்றும், எஸ்.ஐ.ஆர். பணிகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில், இதனைத் தொடர்ந்து, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போராட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ஞானேஷ் குமார் பதவி விலகும் வரையில் தங்களின் போராட்டம் தொடரும் எனவும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

"ஞானேஷ் குமார் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, தேர்தல் முறை மற்றும் செயல்பாடுகள் பாரபட்சமின்றி, நேர்மையானதாக மாற்றவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பிறகே நாங்கள் இந்த அறப்போராட்டத்திலிருந்து விலகுவோம். இது பாதியிலேயே கைவிடக்கூடிய போராட்டம் அல்ல" எனக் கூறியுள்ளார்.

X