கர்நாடக சட்ட சபை முன்பு கோமியம் தெளித்து சிறப்பு பூஜைகள் செய்த காங்கிரஸ் தொண்டர்கள் !

கர்நாடக சட்டசபை தேர்தலில் 135 இடங்களை வென்று, காங்கிஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்துள்ளது.
கர்நாடக சட்ட சபை முன்பு கோமியம் தெளித்து சிறப்பு பூஜைகள் செய்த காங்கிரஸ் தொண்டர்கள் !
Published on

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலில் 135 இடங்களை வென்று, காங்கிஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்துள்ளது. கடந்த 20-ந் தேதி முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும் பதவி ஏற்றுகொண்டனர். அதனை தொடர்ந்து காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின் முதல் சட்டசபை கூட்டம் இன்று விதான சவுதாவில் கூடியது. சட்டசபை கூடுவதற்கு முன்னதாக விதான சவுதா முன்பு காங்கிரஸ் பிரமுகர்கள் சிலர் குவிந்தனர்.

அவர்கள் விதான சவுதாவின் முன்பகுதியில் சிறப்பு பூஜைகள் செய்தனர். அப்போது அவர்கள் கோமியத்தை தெளித்து, பூஜையில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், காங்கிரஸ் கட்சி புதிதாக ஆட்சி அமைத்துள்ளது. இன்று காங்கிரஸ் கட்சியின் முதல் சட்டசபை கூட்டம் நடந்தது. மேலும், பா.ஜனதாவின் ஊழல் ஆட்சியை முடிக்கப்பட்டுவிட்டதும். எனவே விதான சவுதாவை தூய்மைபடுத்துவதற்காக இங்கு கேமியம் தெளிக்கப்பட்டது என்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com