மின்னணு வாக்கு எந்திரத்திற்கு எதிராக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

5 மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.
மின்னணு வாக்கு எந்திரத்திற்கு எதிராக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
Published on

புதுடெல்லி,

உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இந்த தேர்தலில் தற்போதைய நிலவரப்படி உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூரில் பாஜக முன்னிலை வகிக்கிறது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி முன்னிலை வகிக்கிறது.

பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் தற்போது வெளியாகிவரும் முன்னலை நிலவரப்படி, அம்மாநிலத்தை ஆம் ஆத்மி கைப்பற்ற அதிக வாய்ப்பு நிலவி வருகிறது.

பஞ்சாப்பில் ஆட்சியை இழக்கும் பட்சத்தில் தேசிய அளவில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 2 (ராஜஸ்தான், சத்தீஸ்கர்) ஆக குறையும்.

இந்நிலையில், 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் பெரும் சரிவை சந்தித்து வரும் சூழ்நிலையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவகலத்தின் முன் அக்கட்சியினர் சிலர் குவிந்தனர். மேலும், அவர்கள் தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com