

புதுடெல்லி,
முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் எம்பியுமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2014 ஜனவரியில் டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் அண்மையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சுனந்தாவை தற்கொலைக்கு தூண்டியதாக சசிதரூரின் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சுனந்தா புஷ்கர் தற்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவராக சசி தரூர் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ள நீதிமன்றம், தற்கொலைக்கு தூண்டியதாக சசிதரூருக்கு எதிரான புகாருக்கு முகாந்திரம் உள்ளதால், ஜூலை 7 ல் காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தற்போது லண்டனில் உள்ள சசி தரூர், விரைவில் இந்தியா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.