மத்திய பிரதேசம், அரியானா, சிக்கிமில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

ஒரே நாளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மத்திய பிரதேசம், அரியானா, சிக்கிமில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
Published on

புதுடெல்லி,

மத்திய பிரதேசம், அரியானா, சிக்கிமில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதலாவதாக, மத்திய பிரதேசத்தில் இன்று காலை 3.57 மணியளவில் ரிக்டர் அளவில் 2.9 ஆக நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.

இதனையடுத்து, அரியானாவில் இன்று காலை 6.47 மணியளவில் ரிக்டர் 2.5 அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இதனை தொடர்ந்து அரியானாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது காலை 6.53 மணியளவில் ரிக்டர் 2.5 அளவில் பதிவாகி உள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று முறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது சிக்கிமில் ரிக்டர் 4.3 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் காலை 10.54 மணியவளவில் ஏற்பட்டது. இந்தியாவில் ஒரே நாளில் பல்வேறு மாநிலங்களில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com