உத்தரகாண்ட், அருணாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

இந்த நிலநடுக்கம் இன்று காலை ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
உத்தரகாண்ட், அருணாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
Published on

புதுடெல்லி,

உத்தரகாண்டில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 1.59 மணியளவில் ரிக்டர் 2.4 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது

5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 27.865 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 94.239 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.

முன்னதாக, உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் அதிகாலை 1.52 மணியளவில் ரிக்டர் 2.3 அளவில் ஏற்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com