திருமழிசையை புதிய நகராக மேம்படுத்த பரிசீலனை: மாநிலங்களவையில் மத்திய மந்திரி தகவல்

திருமழிசையை புதிய நகராக மேம்படுத்தும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.
திருமழிசையை புதிய நகராக மேம்படுத்த பரிசீலனை: மாநிலங்களவையில் மத்திய மந்திரி தகவல்
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில், தமிழ்நாட்டில் திருமழிசையை புதிய நகராக மேம்படுத்தும் திட்டம் ஆய்வில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை மந்திரி கவுசல் கிஷோர் கூறியதாவது:-

நகர்ப்புறங்களை விரிவாக்கம் செய்ய வேண்டிய தேவைக்காக புதிய நகரங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மாநில அரசுகள் கோரிக்கைகள் அளிக்க கடந்த ஜனவரி 20-ந் தேதிவரை கால அவகாசம் அளிக்கப்பட்டது.

21 மாநிலங்களிடம் இருந்து 26 நகரங்களை புதிய நகரங்களாக மேம்படுத்தும் கோரிக்கைகள் வரப்பெற்றன. அவை மத்திய அரசின் ஆய்வில் இருக்கின்றன. இவற்றில், உத்தரபிரதேசத்தில் அயோத்தி, தமிழ்நாட்டில் திருமழிசை ஆகியவையும் அடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com