‘‘எனக்கு எதிராக சதி நடக்கிறது’’ - சுவாமி சின்மயானந்த் பகிரங்க குற்றச்சாட்டு

பாலியல் புகாரில் சிக்கிய சுவாமி சின்மயானந்த், தனக்கு எதிராக சதி நடப்பதாக பகிரங்க குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
‘‘எனக்கு எதிராக சதி நடக்கிறது’’ - சுவாமி சின்மயானந்த் பகிரங்க குற்றச்சாட்டு
Published on

ஷாஜகான்பூர்,

உத்தரபிரதேசத்தை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி சுவாமி சின்மயானந்த் மீது அவரது கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவி, பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி விட்டு தலைமறைவானார். பிறகு அவர் கண்டுபிடிக்கப்பட்டு, சுப்ரீம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டதுடன், அவரது புகாரை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்நிலையில், சுவாமி சின்மயானந்த் நேற்று முதல்முறையாக பத்திரிகையாளர்கள் முன்பு வந்தார். அவர் கூறியதாவது:-

எனது சட்டக்கல்லூரியை பல்கலைக்கழகமாக தரம் உயர்த்த நான் முயன்று வருகிறேன். இந்த நேரத்தில் அதை தடுப்பதற்காக இப்புகார் எழுந்துள்ளது. இது திட்டமிட்ட சதி. இந்த சதியின் பின்னால் உள்ள உண்மையான நோக்கத்தை சிறப்பு புலனாய்வு குழு கண்டுபிடிக்கும்.

மேலும், என்னிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டல் அழைப்பு வருகிறது. எனக்கு நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது. நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com